
|
வினாதலும் விடுத்தலும்
1. அ) ஓசோன் (Ozone) என்பதற்குத் தமிழ்ச்சொல் உருவாக்கப்பட்டுள்ளதா? இருப்பின் அருள்கூர்ந்து அறிவிக்கவும். ஆ) 'கோவிலன் கதை' என்ற காப்பியத்தைப் புகழேந்திப் புலவர் எழுதியதாகவும் அதில் கண்ணகி கர்ணகையாகவும் மாதவி, மாதகியாகவும் கோவலன் கோவிலனாகவும் குறிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு நூலில் படித்தேன். அது இலக்கண வரம்புக்குள் எழுதப்பட்ட காப்பியமா? ஏன் அது பரவலாகப் பேசப்படவில்லை? அ) 'உயிர்வளிமண்டலம்' என்று கூறலாம். ஆ) அது இலக்கணவரம்புக்கு உட்பட்டதன்று. இலக்கண அறிவில்லாத மக்கள் புலவரால் எழுதப்பட்டது. பொதுமக்கள் நடுவில் வழங்கிய அப்பாடல் இன்று வழக்கில் இல்லை. - ம.இலெ.த. 2. தெளிதமிழ் 17.08.08 இதழின் 20ஆம் பக்கத்தில் "ஆண்டாண்டுக் காலமாக" என ஒற்று மிகுத்து எழுதவேண்டுமெனக் குறிப்பிடப்பட்டுள்yது. அதற்குரிய இலக்கண விதி யாது? ஆண்டு காலம் என்பதை இருபெயரொட்டுப் பண்புத் தொகையாய்க் கொண்டு 'வன்றொடரல்லனமுன்மிகா அல்வழி' என்னும் விதிப்படி இயல்பாக எழுத வேண்டும் என்பது என் கருத்து. உயிர்முன் வல்லினம் மிகுவதற்கான விதி, இயல்பினும் விதியினும் (நன்: 165) என்னும் பொதுவிதியே. இயல்புக்குத்தான் சிறப்பு விதி கூறவேண்டும். நண்டுத் தெறுக்கால், பண்டைக்காலம், அற்புத்தளை முதலியன 'வன்றொடரல்லன' (நன்.181) என்ற பொது விதிக்கு மாறாக வருவனவே. இலக்கண நூல்கள் எல்லாச் சொற்புணர்ச்சிகளுக்கும் விதி கூறுவதில்லை. பொதுவாக அல்வழியில் எழுவாய்த்தொடர், உம்மைத் தொகை, வினைத் தொகைகள் இயல்பு புணர்ச்சியாகவும், பண்புத்தொகை, உவமைத்தொகைகள் திரிபு புணர்ச்சியாகவும் வருவது மரபு. காட்டு:
எனவே, 'ஆண்டாண்டுக்காலம்' என்று மிகுத்து எழுதுவதே மரபு என்க. - இரா.தி. 3. தங்களுடைய 'மொழிப்பார்வை' என்ற நூல் பக்47இல், 'பொருள் விளக்கத்திற்காகப் பிரித்தெழுவதில் சில எதிர்பாரா விளைவுகள் ஏற்பட்டு விடுகின்றன என்பதற்குக் கொழுநன் தொழுது எழுவாள் என்பது சான்று. இது கணவன் தொழுதபின் எழுந்திருப்பாள் என்று பொருள்படும். கொழுநற் றொழுது என்று எழுதினால்தான் கணவனைத் தொழுது என்று பொருள்படும்' என்று எழுதியிருக்கின்றீர்கள். மு.வ. அவர்களும் கொழுநன் தொழுது எழுவாள் என்று பிரித்து எழுதிக்கொழுநனைத் தொழுது எழுவாள் என்றே பொருள் கூறியுள்ளார். நீங்கள் கூறும் விளக்கம் புரியவில்லை. அருள்கூர்ந்து எடுத்துக் காட்டுகளுடன் விளக்குக. 'பொதுப்பெயர் உயர்திணை' (நன். 159), 'உயிரீறாகிய' (தொல். தொகை. 11) என்ற விதிகளின்படி உயர்திணைப் பெயர் ஈறுகள் அல்வழியாயினும் வேற்றுமையாயினும், வல்லினம் வந்தால் இயல்பாகப் புணரும். அதன்படி, 'தலைவன் புகழ்ந்தான்' என்ற தொடர் (தலைவன் தொண்டனைப் புகழ்ந்தான் என்ற பொருளில்) இயல்பாகப்புணரும். இத்தொடர் தலைவனைத் தொண்டன் புகழ்ந்தான் என்ற பொருளைத் தராது. அப்பொருளை இத்தொடர் தரவேண்டுமானால், 'தலைவற்புகழ்ந்தான்' என்று திரிந்து புணர வேண்டும். இதுபோலவே ய், ர், ல், ன் என்ற ஈறுகளை உடைய உயர்திணைச் சொற்களும் இயல்பாகப் புணர்ந்தால் எழுவாய்த் தொடரும், பிறவேற்றுமைத் தொடருமாகும். திரிபாகப் புணர்ந்தால் 2-ஆம் வேற்றுமைத் தொகையாகும். காட்டுகள் : 1. தாய் கொலை செய்தாள் இத்திரிபுகளுக்கு இலக்கணம் கூறும் இடங்கள் : நன். 255. தொல். தொகை 154. இதன்படிக் 'கொழுநன் தொழுது' என்று இயல்பாக எழுதினால் 'கொழுநன் துணைவியைத் தொழுதபின்' என்று பொருள்படும். 'துணைவி கொழுநனைத் தொழுது' என்று பொருள்பட வேண்டுமானால் 'கொழுநற்றொழுது'. என்று திரித்தே எழுத வேண்டும். இந்த இலக்கணப்படித் திரிந்துவந்தால் மட்டுமே உரிய பொருளைத் தருகின்ற 2ஆம் வேற்றுமைப் புணர்ச்சிகளைப் பிரித்தெழுதினால் மாறான பொருளைத்தரும். இதுதான் நான் 'மொழிப்பார்வை' நூலிற் குறிப்பிட்டது. இங்கனமன்றிக் 'கொழுநனைத்தொழுது' என்பதுபோல் உருபு விரித்து எழுதினால் எந்தச் சிக்கலும் எழாது. அப்படியாயின், தம்பியை வென்றான் என்ற பொருளில், 2ஆம் வேற்றுமைத் தொகையாகத் 'தம்பி வென்றான்' என்று எழுதலாமா? வேறுவகையாக எழுதலாமா? என்று கேட்டால், இந்தத் தொடரை 2ஆம் வேற்றுமைத் தொகையாக எழுதமுடியாது. காரணம் தம்பி வென்றான் என்ற புணர்ச்சியில் எந்தத் திரிபையும் செய்வதற்கு இடமில்லை. இத்தகைய தொடர்களை எழுவாய்த் தொடர்களாகவே எழுதமுடியும், இதுபோன்ற தொடர்களை 'அத்தகைய ஆற்றல் இல்லன' என்று குறிப்பிடுவார் சேனாவரையர். கடின சந்திகளைப் பிரித்துப்படிக்கும் திறன் குறைந்த இக்காலப் படிப்பாளிகளுக்காக, இலக்கணத்தில் சற்று நெகிழ்ச்சி காட்டி இன்றைய தமிழறிஞர்கள் புணர்ச்சிகளைச் சந்தி பிரித்தே எழுதுகின்றனர். அவ்வகையில் மு.வ. இப்படி எழுதினாரா? பதிப்பாளர்கள் அவ்வாறு மாற்றி விட்டார்களா என்பது தெரியவில்லை. உண்மை எதுவாயினும் இது போன்ற இடங்களைச் சந்தி பிரித்து எழுதுவது சரியில்லை என்பது எனது கருத்து; தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் என்ற குறளையே, உயர்திணைப் பெயர்ப்புணர்ச்சிகள் எழுவாய்த்தொடரில் இயல்பாக வருதற்கும், 2ஆம் வேற்றுமைத் தொகையிலி திரிபாக வருவதற்கும் காட்டாகக் கொள்ளலாம். தொழுதெழுவாள் பெய்யென - எழுவாய்த்தொடர் - இயல்பு |