
|
தமிழ் வளர்க்கும் தாளாண்மைகள்
நாளிதழ் நடவடிக்கைகள்: சென்ற இதழில் குறித்தபடி அறக்கட்டளைக்கு வந்த நன்கொடைத் தொகை
இணையத் திங்களிதழ் 'தமிழ்க்காவல்' என்ற பெயரில் தி.ஆ. உ0ங ஆடவைத் திங்கள் முதல் நாளில் 15-06-2008 வெளியிடப்பட்டது. அதன் இணைய முகவரி : http://www.thamizhkkaaval.net என்பது. வழக்கப்படி நன்கொடை களைத் 'தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை' என்ற பெயருக்குப் பணவிடையாகவோ கேட்புக் காசோலை யாகவோ திரு தி.ப.சாந்தசீலன், பொருளர், 22, உடையார் தெரு, பாக்கமுடையான்பட்டு, புதுச்சேரி - 605 008 என்ற முகவரிக்கு அனுப்புக. புதுச்சேரி இலக்கியப் பொழில் இலக்கிய மன்றத்தின் 29ஆம் நிகழ்ச்சி: 22-8-2008 அன்று தொழில் முனைவர் திரு பெ. பராங்குசம் வரவேற்புரையாற்ற, "திரைப்படப் பாடல்களில் இலக்கியங்கள்" எனும் பொருளில் பாவலர் கருணாகரன் உரையாற்றினார். கொடுக்கும் தலைப்பில் பிறமொழிச் சொற்கள் கலப்பின்றித் தூயதமிழில் 3 மணித்துளிகள் பேசும் சொல்லாட்சிப் போட்டியைக் கலைமாமணி புலவர் நாகியும், புலவர் கி.த. பச்சையப்பன் அவர்களும் நடத்தினர். போட்டியில் கலந்துகொண்ட பத்துப்பேரில் எவரும் வெற்றிபெறாததால், அவர்களின் முயற்சியைப் பாராட்டிப் பத்துப்பேருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. கலைமாமணி புலவர் பூங்கொடி பராங்குசம் நன்றியுரையுடன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். |
|||||||||||||||