பிழை |
சரி |
| போராட்டம் குறித்தக்கருத்து | போராட்டம் குறித்த கருத்து |
| மரபுவழி சுற்றுலா |
மரபுவழிச் சுற்றுலா |
| மூத்தத் தமிழறிஞர் |
மூத்த தமிழறிஞர் |
| புதியத் திட்டம் |
புதிய திட்டம் |
| முதலீடு புள்ளி விவரம் |
முதலீட்டுப் புள்ளி விவரம் |
| போட்டிப் போட வேண்டும் |
போட்டி போட வேண்டும் |
| தமிழ்சொல்கள் |
தமிழ்ச்சொற்கள் |
| இங்கு தான் இருக்கிறோம் |
இங்குத் தான் இருக்கிறோம் |
| வலுத்தப் பாதுகாப்பு |
வலுத்த பாதுகாப்பு |
| தோப்புக்கரணம் |
தோற்புக்கரணம் |
| தோப்பு நெல்லிக்காய் |
துவர்ப்பு நெல்லிக்காய் |
| பின்னங்கொட்டை |
புன்னங்கொட்டை |
| தமிழ்நாடு சான்றோர் |
தமிழ்நாட்டுச் சான்றோர் |
| சிலைகள் கரைக்கப்படுகிறது |
சிலைகள் கரைக்கப்படுகின்றன |
| இல்ல திருமணம் |
இல்லத் திருமணம் |
| அனுகுங்கள் |
அணுகுங்கள் |
| உள்ளாட்சிதுறை |
உள்ளாட்சித்துறை |
| பழவேற்காடு பாலம் |
பழவேற்காட்டுப் பாலம் |
| புது திருப்பம் |
புதுத் திருப்பம் |
| அரசுப்பேருந்து |
அரசு பேருந்து |
| சாலை ஓர தடுப்பு |
சாலை ஓரத் தடுப்பு |
| தவறுக்காக |
தவற்றுக்காக |
| கயிறுவழி மீட்டனர் |
கயிற்றுவழி மீட்டனர் |
| பத்துபசுமாடுகள் | பத்துப் பசுமாடுகள் |
| தமிழ்சுடர் | தமிழ்ச்சுடர் |
| திருநள்ளாறு கோயில் | திருநள்ளாற்றுக் கோயில் |
| இலட்குமி | இலக்குமி |
| இரவுப் பகலாக | இரவு பகலாக |
| வறுமை கோட்டிற்கு | வறுமைக்கோட்டிற்கு |
| தமிழ்நாடு கல்வியிற்கழகம் | தமிழ்நாட்டுக் கல்வியியற்கழகம் |