மாணாக்கர் பரிசு திட்டம்-137இன் விடைகள் :
| 1. தமிழ்மணம் கமழ வேண்டும் | - பாபநாசம் சிவன் |
| 2. ஆரோ இவர் ஆரோ? | - சீர்காழி அருணாசலக் கவிராயர் |
| 3. எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் | - இராமலிங்க அடிகள் |
| 4. வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி | - பாரதியார் |
| 5. ஆடற்கலைக் கழகு தேடப் பிறந்தவள் | - பாவேந்தர் |
| 6. திங்கள் மாலை வெண்குடையான் | - இளங்கோ அடிகள் |
| 7. அலைபாயுதே கண்ணா | - ஊத்துக்காட்டு வேங்கடசுப்பர் |
| 8. ஏழிசையாய் இசைப்பயனாய் | - சுந்தரர் |
| 9. தெள்ளுதமிழுக் குதவு சீலன் | - சென்னிகுளம் அண்ணாமலையார் |
| 10. ஞானப்பழத்தைப் பிழிந்து | - சங்கரதாசு அடிகள் |
சரியான விடை யெழுதியவர் : ச. செந்தமிழ்ச்செல்வி, கள்ளக்குறிச்சி.
மாணாக்கர் பரிசு திட்டம் - 138
விடுகதை
மழைமுகிற் பேரின் பின்னே வருகின்ற பெற்றந் தன்னைத்
தழுவிடு மரத னப்பேர் தன்னையுஞ் சேர்த்த சொல்லோர்
வழுவிலாக் கூலத் தின்பேர் வகையுணர்ந் துரைசெய் வாரை
மொழிவள முடையா ரென்பேன் முயன்றது கண்டு கூறீர்!
விடைகள் வரும் மடங்கல் க (5.10.2008)க்குள் வந்து சேரவேண்டும்.